Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அதிகரிக்கும் இணைய இடைவெளி - எச்சரிக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனம்

பணக்கார நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான மின்னிலக்க இணைய இடைவெளி, மிதமிஞ்சி அதிகரித்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. பணக்கார நாடுகளில், இணைய வேகம் அதிகரித்துவருவது அதற்கு முக்கியக் காரணம்.

வாசிப்புநேரம் -
அதிகரிக்கும் இணைய இடைவெளி - எச்சரிக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனம்

படம்: The New York Times / Today

பணக்கார நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான மின்னிலக்க இணைய இடைவெளி, மிதமிஞ்சி அதிகரித்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. பணக்கார நாடுகளில், இணைய வேகம் அதிகரித்துவருவது அதற்கு முக்கியக் காரணம்.

வளரும் நாடுகளில் அந்த வேகம் தேங்கிக் கிடக்கிறது.

உலக மக்கள் தொகையில், 52 விழுக்காட்டினருக்கு இன்னமும் இணையச் சேவையே கிடைக்கவில்லை என்பது, நிறுவனத்தின் உலக விரிவலை முன்னேற்ற அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஏனைய சமூக இலக்குகளை நிறைவேற்ற, மேம்பட்ட இணைய வசதி முக்கியம் என்பதை அறிக்கை வலியுறுத்தியது.

உலகளாவிய சராசரி இணைய வேகம் விநாடிக்கு 7.2 மெகாபைட்...

சிங்கப்பூரில் இணையவேகம், விநாடிக்கு 184 மெகாபைட்..

தென்கொரியாவில் இணையவேகம், விநாடிக்கு 28.6 மெகாபைட்.

ஒப்புநோக்க, நைஜீரியாவில் அது 1.5 mbps ஆக உள்ளது.

உலகளாவிய தொடர்பில் இவ்வளவு பெரிய வேறுபாடு உருவாவது, நாடுகளுக்கு இடையே பெரிய மின்னிலக்கப் பிளவை ஏற்படுத்திவிடுமெனத் தெரிவிக்கப்பட்டது.

குடிமக்களின் மேம்பட்ட ஆரோக்கியம், கல்விப் பரவல், நீடித்த வேளாண் உற்பத்தி உள்ளிட்ட அம்சங்களில், இணையத் தொடர்பு அதிகப் பங்கு வகிக்கிறது. போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இணையத் தொடர்பு பாதிக்கப்படும்போது, நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்படுவதாக, உலக நிறுவனம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்