Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மருத்துவருடன் இணையத்தில் ஆலோசனை - முன்னெச்சரிக்கை தேவை

இணையத்தின் மூலம் மருத்துவ ஆலோசனைகளையும் மின் மருத்துவச் சான்றிதழ்களையும் தற்போது பெற இயலும். அவ்வாறு செய்வது குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனச் சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மருத்துவருடன் இணையத்தில் ஆலோசனை - முன்னெச்சரிக்கை தேவை

படம்: Today

இணையத்தின் மூலம் மருத்துவ ஆலோசனைகளையும் மின் மருத்துவச் சான்றிதழ்களையும் தற்போது பெற இயலும். அவ்வாறு செய்வது குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனச் சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மெய்நிகர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் போலியான நோய்களுக்கும் எளிதில் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற முடியும்.

அதே நேரத்தில், நோயாளிகள் மெய்நிகர் மருந்துவ ஆலோசனை பெறுவதற்காக செலுத்தப்படும் பணம், மூன்றில் ஒரு பங்கு, இணையத் தளத்தை நடத்தும் நிறுவனத்துக்குச் செல்கிறது.

அது சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் வீதிகளை மீறுவதாகும். Doctor Anywhere, MyDoc போன்ற இணைய மருத்துவ ஆலோசனை இணையவாசல்கள், அந்தச் சேவையால் கிடைக்கும் ஏராளமான பலன்களைச் சுட்டிக் காட்டின.

நோயாளிகள் மருத்துவரைப் பார்க்க மணிக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியதில்லை என்பது அவற்றுள் முக்கியமானது.

தனியாக நேரம் ஒதுக்காமல், வீட்டிலிருந்தபடியே மருத்துவரின் ஆலோசனையைப் பெற முடிகிறது.

மேலும், தங்களிடம் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள் அனுபவசாலிகள் என்றும், எப்போது மருத்துவச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியுமென்றும் மருத்துவ இணையவாசல்கள் குறிப்பிடுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்