Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தம் - சில தகவல்கள்

உயர் இரத்த அழுத்தம் தொடர்பான அளவுகோலை மாற்றியமைத்திருப்பதாக அமெரிக்க இருதயச் சங்கம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

வாசிப்புநேரம் -

உயர் இரத்த அழுத்தம் தொடர்பான அளவுகோலை மாற்றியமைத்திருப்பதாக அமெரிக்க இருதயச் சங்கம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
புதிய வரையறையின்படி, 130க்கு 80 என்ற இரத்த அழுத்தம் இருந்தாலே ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆயினும், அந்த வழிகாட்டி முறைகளைப் பின்பற்றப்போவதில்லை என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

140க்கு 90 என்ற வரையறையைத் தொடர்ந்து பின்பற்றப்போவதாகச் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரத்த அழுத்தம் பற்றிய சில குறிப்புகள் இங்கே:

1. உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயம் துடிக்கும்போது அது உடல் முழுதும் இரத்தத்தைச் செலுத்துகிறது. இரத்தக் குழாய்களின் வழியாகச் செல்லும் இரத்தம், குழாய்ச்சுவர்களைத் தள்ளிக்கொண்டே செல்கிறது. அந்த வேகத்தை அளவிடுகிறது இரத்த அழுத்தம்.

இரத்த அழுத்தம் இதயத்திலுள்ள இரத்தக் குழாயை பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் இதனால் ஏற்படலாம்.

ரத்தத்திலுள்ள உயிரணுக்கள். (படம்: Reuters)

2. இரத்த அழுத்தம் எப்படி அளவிடப்படுகிறது?

உயர் இரத்த அழுத்தத்தைக் காட்டும் வெளிப்படையான உடல் அறிகுறிகள் இல்லை.

உங்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வாக உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமா? அதனை இரத்த அழுத்த கருவியைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள முடியும்.

இரத்த அழுத்தம் mmHg என்ற கணக்கில் அளவிடப்படுகிறது.
உதாரணத்திற்கு உங்கள் அளவு 120/80mmHg ஆக இருந்தால் அதனை "120க்கு 80 என்ற இரத்த அழுத்தம்" என்று கூறப்படுகிறது

3. இரண்டு எண்கள் ஏன்?

சிஸ்டோலிக் அழுத்தம்: முதலில் காணப்படும் எண். இதயம் துடிக்கும்போது ஏற்படும் ஆக உயரிய இரத்த அழுத்தத்தை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.

டயஸ்டோலிக் அழுத்தம்: துடிப்புகளுக்கிடையில் இதயம் இதம் அடையும் போது ஆகக் குறைவான இரத்த அழுத்தம்.

"120/80mmHg" என்ற இரத்த அழுத்தத்தில் 120 என்பது சிஸ்டோலிக் அழுத்தம், 80 என்பது டயஸ்டோலிக் அழுத்தம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்