Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆயுளைக் குறைக்கும் மனநோய்

மருத்துவமும் நோய்களுக்கான மருத்துவ முறையும் காலப்போக்கில் வெகுவாக முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. ஆனாலும் மனநோயாளிகள் முன்கூட்டியே மரணமடையும் நிலையில் அதிக மாற்றமில்லை.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மருத்துவமும் நோய்களுக்கான மருத்துவ முறையும் காலப்போக்கில் வெகுவாக முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.
ஆனாலும் மனநோயாளிகள் முன்கூட்டியே மரணமடையும் நிலையில் அதிக மாற்றமில்லை.

சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 82 வயதாக உள்ளது. ஆனால் மனநோயாளிகள் மற்றவர்களைக் காட்டிலும் முன்கூட்டியே மடிவது தொடர்கிறது. மனநோயாளிகள் சராசரியாக 62 வயதிலேயே மாண்டுவிடுவதாக மனநலக் கழகம் தெரிவித்தது.

2015க்கும் 2016க்கும் இடையே மாண்ட 891 மனநலக்கழக நோயாளிகளின் சராசரி வயது 64.3. மற்ற உலக நாடுகளில் உள்ள புள்ளிவிவரங்களும் கிட்டத்தட்ட அதே அளவில் உள்ளன.

அதிகமாகப் புகைபிடிப்போருக்கும் இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படும் மரணங்களைவிட மனநோயாளிகளுக்கு ஏற்படும் மரணம் இரண்டு மடங்கு அதிகம்.

'சிஸோஃப்ரேனியா' எனப்படும் மனநோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஆக அதிகம். அந்நோயால் அவதிப்படுவோர் தங்கள் ஆயுட்காலத்தில் 28.5 நாட்களை இழக்கின்றனர்.

அகால மரணங்கள், மிகக் கடுமையான மன நோயாளிகளுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. பதற்றம் அடிக்கடி ஏற்படும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் கூட முன்கூட்டியே மரணம் ஏற்படும் அபாயம் கணிசமாக உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்