Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அழுவது ஏன்?

கண்ணீருக்குப் பிறரின் கவனத்தை ஈர்க்கும் தன்மையும் உண்டு. உதவி வேண்டும் என உதடுகள் கேட்கத் தயங்கும் வேளையில் கண்கள் அதனைக் காட்டிக் கொடுத்துவிடும். 

வாசிப்புநேரம் -

தண்ணீர் போன்றே மிக முக்கியமானது கண்ணீர்.

விஞ்ஞானிகள் கண்ணீருக்குப் பலன் இல்லை என்று சொன்னது ஒரு காலம்.

ஆண்டுகள் ஓடிவிட்டன.. இன்னமும் அது புரியாத புதிராகவே உள்ளது.

உணர்வுகளின் தாக்கத்தால் அழும் தன்மை மனிதனுக்கு உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஏன் அப்படி?

சோகத்தில் மட்டும் ஒருவர் அழுவதில்லை.
பாசம், பரிவு, இன்பம், பரிதவிப்பு, கோபம் போன்றவை கூட ஒருவரின் கண்ணீருக்குக் காரணமாக இருக்கலாம்.

பல நூற்றாண்டாக, கண்ணீர்த் துளிகள் இதயத்திலிருந்து தோன்றுவதாகக் கூறப்படுவதுண்டு.
அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

சில உணர்வுகள் இதயத்தின் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

அந்த வெப்பத்தைத் தணிக்க நீராவி உருவாகிறது.

அது பின்னர் தலைக்குச் சென்று, கண்கள் வழியாகக் கண்ணீர்த் துளிகளாக வெளியாவதாக 1600களில் அறிஞர்கள் கூறினர்.

அதனால்தானோ என்னவோ ஆத்திரத்தால் ஏற்படும் அழுகையில் கோபம் மறைந்து நமக்கு நம்மீதே பரிதாபம் ஏற்படும் நிலை கூட ஏற்படுகிறது.

கண்களின் ஈரப் பதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் கண்ணீர் பெரும் உதவியாக உள்ளது. 

கண்ணீருக்குப் பிறரின் கவனத்தை ஈர்க்கும் தன்மையும் உண்டு. உதவி வேண்டும் என உதடுகள் கேட்கத் தயங்கும் வேளையில் கண்கள் அதனைக் காட்டிக் கொடுத்துவிடும். 

இப்படிப் பல வகைகளில் உதவும் கண்ணீர்த் துளிகள் கட்டாயம் வாழ்க்கையில் தேவைதான் போலும்..


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்