Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் ஏன் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் உள்ளன?

சாலைகளைப் பயன்படுத்தும்போது போக்குவரத்து சமிக்ஞைகளுக்கான நிறங்களும் அந்த மூன்றுதான்! ஏன் என்று யோசித்தது உண்டா?

வாசிப்புநேரம் -

குழந்தைப் பருவத்திலிருந்தே சிவப்பு என்றால் அபாயம் என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது.

பச்சை கொடி காட்டினால் சாதகமான முடிவு என்றும் மஞ்சள் கண்ணுக்குக் குளிர்ச்சி என்றும் நாம் பல பேர் சொல்லி கேட்டிருப்போம்.

சாலைகளைப் பயன்படுத்தும்போது போக்குவரத்து சமிக்ஞைகளுக்கான நிறங்களும் அந்த மூன்றுதான்!

ஏன் என்று யோசித்தது உண்டா?

கார்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னர் பெரும்பாலும் மக்கள் ரயில்களில் பயணம் செய்தார்கள்.

அவற்றுக்கான சமிக்ஞை விளக்குகளின் நிறங்கள் சிவப்பு, வெள்ளை,  பச்சையாக இருந்தன.

சிவப்பு என்றால் நிறுத்த வேண்டும்.

வெள்ளை என்றால் ரயில் புறப்படத் தொடங்கும்.
பச்சை என்றால் அபாயம்.

அந்த வண்ணங்கள் ரயில் அதிகாரிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஜொலிக்கும் நட்சத்திரத்தைக் கண்டு அதிகாரி ஒருவர் ரயில் புறப்படலாம் என அறிவித்துள்ளார். அதனால் அசம்பாவிதமும் நடந்துள்ளது.

இத்தகைய குளறுபடிகளால் சமிக்ஞை வண்ணங்களை மாற்றலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டது வெள்ளை.

சிவப்பு நிறத்தைத் தொலை தூரத்திலிருந்து துல்லியமாகக் கண்டறியலாம்.

மஞ்சள் நிறம் அருகில் உள்ளவர்களை எச்சரிக்க உதவும்.

1900ஆம் ஆண்டுகளில் பல அறிவிக்கை பலகைகள் மஞ்சள் நிறங்களில் அமைக்கப்பட்டன.

இருட்டில் அத்தகைய வண்ணங்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் என நம்பப்பட்டது.

பள்ளி வளாகங்கள், பள்ளிப் பேருந்துகள் போன்றவை இன்னமும் மஞ்சள் நிறத்தையே பயன்படுத்துகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்