Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கோபத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி அறிய வேண்டியவை

 சில நேரங்களில் கோபப்படுவதைத் தவிர்க்க முடியாது. நமது அன்புக்குரியவர்கள் ஆபத்தில் இருக்கும்போது கோபப்படுவது இயல்பு. யாருடைய மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுவிட்டு அதை மறந்துவிடுங்கள். 

வாசிப்புநேரம் -

கோபப்படுவது மனித இயல்பு.

அதை கையாளும் முறையின் மூலம் கோபத்தை நாம் நமக்குச் சாதகமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

1. நமக்கு எரிச்சலூட்டுபவை நமது உடல் நலனைப் பாதிக்கலாம்.

அதிகமாகக் கோபப்படுவோருக்கு உயர் இரத்த அழுத்தமும் இருதய நோயும் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 

2. கோபத்தைத் தகுந்த முறையில் கையாள, நாம் எதனால் கோபப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். 

3. தகுந்த முறையில் கோபத்தைக் கையாளும்போது, அது நமக்கு ஓர் உந்துசக்தியாகிறது.

எரிச்சல் சில நேரங்களில் பிரச்சினைகளுக்குப் புதுத் தீர்வு கண்டுபிடிக்க ஊக்குவிக்கும். கோபத்தை வைராக்கியமாக மாற்றினால், கவனம் குவித்து எதையும் சாதிக்கும் உறுதி உண்டாகும். 

4. கோபத்தில் நமது செயல்பாட்டை நாம் நன்கு கவனிக்க வேண்டும்.

சில சமயங்களில் அது பேச்சுவார்த்தை நமக்குச் சாதகமாக முடிய உதவி செய்யும். கோபமாகப் பேசுபவர் இனி விட்டுக் கொடுக்கமாட்டார் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

5. அதே சமயத்தில், கோபம் அளவுக்கு மீறி இருந்தால் அது நன்மையில் முடியாது. 

6. கோபத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவோரை எல்லாரும் தவிர்ப்பார்கள். 

7. கோபத்தைத் தணிப்பதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யலாம் அல்லது பிடித்தமான இசையைக் கேட்கலாம். 

8. கருத்து வேறுபாடுகள் சண்டையாக மாறுவதைத் தவிர்க்க, கருத்துப் பரிமாறும் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடுவதைத் தவிர்ப்பது நல்லது. 

9. கோப்படும்போது சமாதானம் ஆவது உங்களுக்குக் கடினமாக இருந்தால், உங்களுக்கு ஏதாவது மன நலப் பிரச்சினை இருக்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் மருத்துவரை அணுக வேண்டும். 

10. சில நேரங்களில் கோபப்படுவதைத் தவிர்க்க முடியாது.

நமது அன்புக்குரியவர்கள் ஆபத்தில் இருக்கும்போது கோபப்படுவது இயல்பு. யாருடைய மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுவிட்டு அதை மறந்துவிடுங்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்