Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடல்நலப் பரிசோதனைக் குறிப்புகள்

எந்த ஒரு நோயையும் குணப்படுத்துவதற்கு அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது முக்கியம்.

வாசிப்புநேரம் -

எந்த ஒரு நோயையும் குணப்படுத்துவதற்கு அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது முக்கியம்.

நோய்க்கான அறிகுறி ஏதும் இல்லை என்றாலும்கூட முறையான உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் நாம் அதனை முன்கூட்டியே கண்டுபிடித்துவிட முடியும். 

உடல்நலப் பரிசோதனை பற்றிய தகவல்கள்:

- உடல்நலப் பரிசோதனை என்றால் என்ன?

உடல்நலப் பரிசோதனை அனைவருக்கும் அவசியம். நோய்க்கான எவ்வித அறிகுறியும் தென்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கையாக அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது. 

- ஏன் உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்?

உடலில் எந்தவிதப் குறைபாடும் இல்லாததைப் போல் தோன்றினாலும் உள்ளுக்குள் நோய்கள் இருக்கக்கூடும். நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை பெற்றால் அவற்றைக் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம். மேலும் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், கடுமையான பின்விளைவுகளைத் தவிர்க்கலாம்.

பரிசோதனையின் முடிவுகள் வழக்கமான நிலையில் இருந்தாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் மாறுதல்கள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். 

பரிசோதனையின் முடிவு வழக்கத்துக்கு மாறாக இருந்தால், அது பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும். 

- உடல்நலப் பரிசோதனைக்குச் செல்ல பணப்பற்றாக்குறை இருந்தால் என்ன செய்வது? 

சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் பரிசோதனைகள் சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகின்றன.

வசதி குறைந்த சிங்கப்பூரர்களும் வயதில் மூத்தவர்களும், CHAS அட்டையையோ முன்னோடித் தலைமுறையினருக்கான அட்டையையோ கொண்டு அந்தச் சலுகைகளைப் பெறலாம். 

- மெடிசேவ் (Medisave) பயன்படுத்தி உடல்நலப் பரிசோதனைக் கட்டணம் செலுத்த முடியுமா?

தற்போது, நீரிழிவு நோய்ச் சோதனைக்கும் இரத்தக் கொழுப்பின் அளவை அறிந்து கொள்வதற்கும் மெடிசேவ் சேமிப்பைப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது. 

ஆனால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு போன்ற நாட்பட்ட நோய்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால், வெளிநோயாளி சிகிச்சைக்கான கட்டணத்தில் ஒருபகுதியை, மெடிசேவ் பயன்படுத்திச் செலுத்தலாம். 

50 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது மெடிசேவ், அல்லது குடும்ப உறுப்பினரின் மெடிசேவைப் பயன்படுத்தி சில பரிசோதனைகளுக்குக் கட்டணம் செலுத்தலாம். 

- கர்ப்பமாக இருக்கும்போது உடல் நலப் பரிசோதனைகள் பெறலாமா?

மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.

- ஏற்கனவே நாட்பட்ட நோய்க்கான மருந்துகளை உட்கொள்வோர் தொடர்ந்து உடல் நலப் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டுமா?

மருத்துவர் உங்கள் உடல் நிலையை கவனித்து வருவார். அவரது ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்