Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வேலையிடத்திற்காக மீண்டும் உருவாக்கப்பட்ட கூகுள் திறன் கண்ணாடிகள்

ஈராண்டுக்கு முன் கைவிடப்பட்ட கூகுள் நிறுவனத்தின் "கூகுள் கிளாஸ்" எனப்படும் திறன் கண்ணாடிகள்  மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

வாசிப்புநேரம் -
வேலையிடத்திற்காக மீண்டும் உருவாக்கப்பட்ட கூகுள் திறன் கண்ணாடிகள்

(படம்: AFP / Justin Sullivan)

ஈராண்டுக்கு முன் கைவிடப்பட்ட கூகுள் நிறுவனத்தின் "கூகுள் கிளாஸ்" எனப்படும் திறன் கண்ணாடிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

இம்முறை கண்ணாடிகளை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முனைந்துள்ளது கூகுள்.

இணையத் தொடர்பு கொண்ட கண்ணாடிகளுக்குக் கூடுதல் நேரம் செயல்படும் ஆற்றல் உள்ளது.

மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் (HoloLens) கண்ணாடிகளுடன் போட்டியிடவிருக்கிறது புதிய கூகுள் திறன் கண்ணாடி.

மேம்படுத்தப்பட்ட கண்ணாடிகள், உற்பத்தித் துறை, தளவாடத் துறை, மருத்துவத் துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டன.

கைகள் வேலை செய்யும் வேளையில் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கண்ணாடியிடம் கேட்பது உதவியாக இருக்கும் என கூகுள் நம்புகிறது.

ஆனால் படங்கள், காணொளிகளை எடுக்கும் கண்ணாடிகளின் திறன் ஒருவரின் சுதந்திரத்தைப் பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்