Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமூக ஊடகங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

அன்றாட வாழ்க்கையில் பின்னிப்பினைந்துள்ளன சமூக ஊடகங்கள். அதில் யார் வேண்டுமானாலும் கருத்துரைக்கலாம், எவருடன் வேண்டுமானாலும் இணையலாம். இந்த சுதந்திரமான சூழல் உருவாக்கும் அபாயங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில குறிப்புகள்.

வாசிப்புநேரம் -
சமூக ஊடகங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

(படம்: AFP)

அன்றாட வாழ்க்கையில் பின்னிப்பினைந்துள்ளன சமூக ஊடகங்கள். அதில் யார் வேண்டுமானாலும் கருத்துரைக்கலாம், எவருடன் வேண்டுமானாலும் இணையலாம். இந்த சுதந்திரமான சூழல் உருவாக்கும் அபாயங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில குறிப்புகள்.

இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம்

Facebook, Instagram ஆகிய தளங்களில் இருக்கும் இடத்தைப் பகிர்வு செய்யும் வசதி குற்றவாளிகளுக்கு உதவியாக இருக்கலாம், இதனால் இடத்தை விட்டு விலகிச் சென்ற பிறகு மட்டுமே அவ்வாறு செய்யவும்.

தவறான தகவலைப் பரப்பாதீர்

ஒரு தகவல் உண்மையா? பொய்யா? என உறுதி செய்யாமல் அதை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம். தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவோருக்குத் தகவல்தொர்டபு சட்டத்தின் கீழ் $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் பதிவுகளைச் செய்ய வேண்டாம்

மற்றவர்களின் கருத்துகள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அதற்கு கடுமையான மொழியில் பதிலளிப்பதைத் தவிர்க்கவும். அதனுடன் மற்றவரின் இனம், மதம் ஆகியவற்றை அவமதித்துப் பேசும் வகையிலான பதிவுகளைத் தவிர்க்கவும்.

சில தொடர்புகளைத் துண்டிப்பது நல்லது.

ஒருவரின் கருத்துக்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவரை உங்கள் நண்பர்கள் பட்டியலிருந்து நீக்கிவிடுவதே நன்று. ஒரு தனிப்பட்ட நபரிடமிருந்து சமூக ஊடகங்களில் உங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தால் உடனடியாக நிர்வாகத்திடம் புகார் செய்யலாம்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்