Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நல்லாச் சாப்பிடுங்க...நல்லதையே சாப்பிடுங்க....

கேக், மிட்டாய், சர்க்கரை பானங்கள்...உடலுக்குக் கேடு விளைவிக்கும் இத்தகைய உணவுப் பொருட்களை நம்மில் பலர் மிகவும் விரும்புவதுண்டு.

வாசிப்புநேரம் -

கேக், மிட்டாய், சர்க்கரை பானங்கள்...

உடலுக்குக் கேடு விளைவிக்கும் இத்தகைய உணவுப் பொருட்களை நம்மில் பலர் மிகவும் விரும்புவதுண்டு.  அவற்றை அதிகம் உண்பது நல்லதல்ல என்று தெரிந்திருந்தும் அந்தப் பழக்கத்தைப் பலரால் கைவிட முடிவதில்லை.

என்ன காரணம்?

நமது மூளை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உணவின் மணம், சுவை ஆகியவற்றால் நாம் ஈர்க்கப்படுகிறோம்.

சில உணவு வகைகள் நம் நாவுக்குத் தரும் சுகம்,

ருசி அடிமைத்தனத்தில் மீள முடியாமல் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது.
உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றின் கலவை நமது மூளைக்கு உற்சாக உணர்வூட்டுகிறது. அதனால் அவ்வகை உணவுகளைச் சாப்பிடத் தூண்டுகிறது நம் மூளை.

சரி. இதற்கு என்ன தீர்வு?

மனக்கட்டுப்பாடு ஒன்றே மாமருந்து.

உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவு வகைகளைக் குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத நேரங்களில் அத்தகைய உணவை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கேடு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுப் பண்டங்களைச் சாப்பிடும் பழக்கத்தைத் சுமார் 20 நாட்கள் விடாமல் கடைபிடித்துப் பாருங்கள்.

21 ஆம் நாளிலிருந்து அதுவே பழக்கமாகிவிடும்.

நல்லாச் சாப்பிடுங்க...நல்லதையே சாப்பிடுங்க....

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்