Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டைச் சுத்தம் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள வீடுதான் என்கிறது ஒரு பாடல்.

வாசிப்புநேரம் -

சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள வீடுதான் என்கிறது ஒரு பாடல்.
வீட்டில் குப்பை அதிகம் குவிந்தால் நமக்கு மனவுளைச்சல் கூடுவதை உணர முடிகிறது. வீட்டைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுவோருக்கு 20 விழுக்காடு வரை மனவுளைச்சல் குறையும் என்று ஸ்காட்லந்து சுகாதார கருத்தாய்வு குறிப்பிடுகிறது.

குறிப்பாக, எலுமிச்சை மணம் கொண்ட பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால் மனவுளைச்சல் மேலும் குறையும், உற்சாகம் மேலோங்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.அத்துடன், வீட்டைச் சுத்தம் செய்வதால் சுவாசம் மேம்படும்.

சுத்தம் செய்யாமல் இருந்தால் வீட்டில் தூசு போன்ற மாசுப் பொருட்கள் சேரும். அது நமது நுரையீரலுக்கு நல்லதல்ல. வீட்டை அடிக்கடி சுத்தம் செய்பவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் இண்டியானா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டைச் சுத்தமாக வைத்திருப்போர் பொதுவாக அதிக உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்களாம். வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்கும் முனைப்புடன் இருப்போர் தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் தன்முனைப்புக் கொண்டவர்கள் என்பது அதற்குரிய காரணமாகக் கருதப்படுகிறது.

எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இன்றே களத்தில் குதியுங்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்