Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வாட்சப் போல செயலிகள் சில...

குறுந்தகவல்களை அனுப்பும் ஆகப் பிரபலச் செயலியாக உள்ளது வாட்சப். சுமார் ஒரு பில்லியன் பேர் வாட்சப்பைப் பயன்படுத்துகின்றனர்.

வாசிப்புநேரம் -

குறுந்தகவல்களை அனுப்பும் ஆகப் பிரபலச் செயலியாக உள்ளது வாட்சப். சுமார் ஒரு பில்லியன் பேர் வாட்சப்பைப் பயன்படுத்துகின்றனர்.
ஆயினும், அதற்கும் போட்டியாக பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.

வாட்சப்பிற்கு மாற்றுச் செயலி ஒன்றைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? இதோ சில தேர்வுகள்!

ஃபேஸ்புக் மெசெஞ்சர்

ஃபேஸ்புக் மெசெஞ்சரும் வாட்சப்பும் இப்போது ஒரே நிறுவனத்தின் கீழ் உள்ளன. ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக, ஃபேஸ்புக் மெசெஞ்சர் வேகமாக முன்னேறி வருகிறது. ஃபேஸ்புக் மெசெஞ்சரில் அழகிய வண்ணப்படங்கள், புதுவகை விளையாட்டுகள் ஆகியவற்றால் அதனைப் பயன்படுத்தும் அனுபவம் சுவாரசியமாகிறது.

லைன் (Line)

ஜப்பானின் ஃபேஸ்புக் என்று அழைக்கப்படுகிறது இச்செயலி. அதனைச் சுமார் 214 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். லைனில் 1 GB அளவு வரையிலான கோப்புகளைப் பகிரலாம். அவ்வாறு வாட்சப்பில் தற்போதைக்குச் செய்ய முடியாது.

டெலிகிராம்

வாட்சப்பிற்குச் சிறந்த மாற்றுச் செயலியாக டெலிகிராம் உள்ளது. வாட்சப்பில் இல்லாத பல அம்சங்கள் இதில் உள்ளன. டெலிகிராமில் அனுப்பப்படும் குறுந்தகவல், சில விநாடிகளுக்குப் பிறகு தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்படி நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும். டெலிகிராமில் 1.5 GB வரையிலான கோப்புகளைப் பகிர முடியும். மேலும், 1000 பேர் வரை உள்ள குழுக்களையும் அந்தச் செயலியில் அமைக்கலாம்.

கூகுள் அல்லோ (Google Allo)

வாட்சப்பிற்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் அல்லோவைத் தயாரித்துள்ளது. கூகுளின் பல அம்சங்களை இந்தச் செயலியில் பயன்படுத்தலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்