Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பீஸாவை ஆடையாக மாற்றிய மாது

பலரும் விரும்பி உட்கொள்ளும் உணவு பீஸா. பீஸா மீதான பிரியத்தை மேலும் ஒரு படி கொண்டு சென்றுள்ளார் அமெரிக்க ஆடை வடிவமைப்பளர் ஒலிவியா மேயர்ஸ் ( Olivia Maers).

வாசிப்புநேரம் -
பீஸாவை ஆடையாக மாற்றிய மாது

(படம்: Instagram)

பலரும் விரும்பி உட்கொள்ளும் உணவு பீஸா. பீஸா மீதான பிரியத்தை மேலும் ஒரு படி கொண்டு சென்றுள்ளார் அமெரிக்க ஆடை வடிவமைப்பளர் ஒலிவியா மேயர்ஸ் ( Olivia Maers).

பீஸாவைப் போலவே காளான், தக்காளி, குடைமிளகாய்த் துண்டுகளின் வடிவங்கள் ஆடையில் சேர்க்கப்பட்டுள்ளன.

I created a dress that dreams are made of. If only I'd had this for my prom. ✨��✨ #pizzadress made & worn by me.

A post shared by Olivia Mears, the "Taco Belle" (@avantgeek) on

இன்ஸ்டாகிராமில் வலம்வரும் இந்த ஆடையைப் பார்த்தாலே பலரின் நாக்கு ஊறும்.

ஆடையைக் கண்டு பெண்கள் சிலர் தங்கள் திருமணத்திற்கு இந்த ஆடையை அணியக் கேட்டுள்ளனர். ஆனால் ஆடை விற்பனைக்கு இல்லை என்று கையை விரித்துவிட்டார் ஒலிவியா.

ஒருமுறை மட்டுமே இத்தகைய ஆடைகளைத் தம்மால் உருவாக்க முடியும் என்கிறார் இவர்.

பீஸா ஆடையை வடிவமைத்தது மட்டுமல்லாமல் மற்ற உணவுப் பொருட்களின் வடிவத்தைத் தழுவி பல ஆடைகளை வடிவமைத்துள்ளார் ஒலிவியா.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்