Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மெய்நிகர் தொழில்நுட்பக் களத்தில் மோதிக்கொள்ளும் கூகுள், ஆப்பிள்

'ஆல்ஃபபெட்' (Alphabet inc) நிறுவனத்திற்குச் சொந்தமான கூகுள், 'ஆண்ட்ராய்ட்' ரகத் திறன்பேசிகளுக்கு மெய்நிகர் தொழில்நுட்பச் செயலிகளை உருவாக்குவதற்கான கருவிகளைத் தயாரித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சான் ஃபிரான்சிஸ்கோ: 'ஆல்ஃபபெட்' (Alphabet inc) நிறுவனத்திற்குச் சொந்தமான கூகுள், 'ஆண்ட்ராய்ட்' ரகத் திறன்பேசிகளுக்கு மெய்நிகர் தொழில்நுட்பச் செயலிகளை உருவாக்குவதற்கான கருவிகளைத் தயாரித்திருக்கிறது.

Pokémon Go என்ற விளையாட்டுச் செயலியின் வாயிலாக மெய்நிகர் தொழில்நுட்பம் கடந்தாண்டு மிகவும் பிரபலமானது.
Samsung Galaxy S8 கைத்தொலைபேசியிலும்கூகுளுக்குச் சொந்தமான Pixel தொலைபேசியிலும் மெய்நிகர் தொழில்நுட்பத்தைக் கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளது.

ARCore என்ற மெய்நிகர் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பயனீட்டாளர்களுக்கு வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், ARCoreஐப் போல் ARKitஎன்ற மெய்நிகர் தொழில்நுட்பக் கட்டமைப்பை இவ்வாண்டு ஜூனில் அறிமுகப்படுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்