Images
  • India Iron man 2
    (படம்: யூட்டியூப்)

இந்தியா: உண்மை வாழ்க்கையில் 'இரும்பு மனிதன்'

Iron Man எனப்படும் 'இரும்பு மனிதனை', திரைப்படங்களில் பலர் கண்டிருப்பார்கள்...
படத்தின் கதாபாத்திரமான அந்த 'இரும்பு மனிதன்' , உலோகங்களால் செய்யப்பட்ட உடற்கவசத்தை அணிந்துகொண்டு அங்குமிங்கும் பறந்து சாகசங்கள் பலவற்றைப் புரிவார்.
உண்மையில் ஓர் 'இரும்பு மனிதன்', இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் செளராஸ்யா, துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட உடற்கவசம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். அந்த உடற்கவசத்தை ராணுவத் தளங்களிலிருந்து இணையம் வழியாக இயக்கலாம் என்கிறார் திரு செளரஸ்யா.

தேசியத் தற்காப்புக்காக தமது கண்டுபிடிப்பை இந்திய ராணுவம் என்றாவது ஒரு நாள் பயன்படுத்தும் என்று திரு செளராஸ்யா நம்புகிறார்.
பயங்கரவாதத்திலிருந்தும்எல்லைப் பூசல்களிலும் சிறப்புவாய்ந்த அந்த இரும்புக் கவசம் வீரர்களைப் பாதுகாக்கும் என்று அவர் கூறுகிறார்.

உங்கள் கருத்து

Top