Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வருகிறதா ஆப்பிள் கார்?

ஆப்பிள் நிறுவனம் ஓட்டுநரில்லாக் கார்களை உருவாக்கத் திட்டமிடுவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
வருகிறதா ஆப்பிள் கார்?

(படம்: AFP/Josh Edelson)

ஆப்பிள் நிறுவனம் ஓட்டுநரில்லாக் கார்களை உருவாக்கத் திட்டமிடுவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

நிறுவனத்தின் மென்பொருட்களையும் வன்பொருளையும் கொண்டு ஓட்டுநரில்லாக் கார்களை உருவாக்கும் விருப்பத்தை நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமாகும் முன் தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் ஓட்டுநரில்லா வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருவதாக அதன் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அறிவித்தார்.

எதிர்காலத்தில் வாகனத் துறையில் ஓட்டுநரில்லா வாகனங்கள் முன்னணி வகிக்கும் என்று ஊகிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை ஆப்பிள் ஓட்டுநரில்லா கார்களைச் சோதிப்பதாக பல வதந்திகள் பரவிவந்தன.

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் ஓட்டுநரில்லா கார்களைச் சோதிக்கும் உரிமத்தைப் பெற்றது.

சில வாகனப் பொறியாளர்களையும் அது வேலையில் அமர்த்தியுள்ளது.

உணர்கருவிகள் பொருத்தப்பட்ட கார்கள் ஆப்பிள் நிறுவன வளாகத்தில் வலம் வரும் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஆப்பிள், சிரி என்ற தனது செயற்கை நுண்ணறிவுச் சேவையை மேம்படுத்தி சாலை ஓட்டுநர்களுக்குத் துணையாக அமல்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் ஐஃபோன், ஐபேட், ஹோம்பாட் உள்ளிட்ட கருவிகளைக் கார்களோடு ஒருங்கிணைக்கும் வகையில் அது அமையும்.

அதை சாத்தியப்படுத்த ஆப்பிள் மற்ற கார் நிறுவனங்களோடு ஒத்துழைக்கும் வாய்ப்பும் உள்ளது.

கூகிள், டெஸ்லா நிறுவனங்களும் ஓட்டுநரில்லாக் கார்களைச் சோதிக்கும் வேளையில் ஆப்பிளின் கார்களுக்குக் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்