Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உப்பின் சில பயன்பாடுகள்...

வீட்டின் அன்றாடச் சமையலுக்கு உப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உப்பை வேறு சிலவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

வாசிப்புநேரம் -
உப்பின் சில பயன்பாடுகள்...

படம்: AFP

வீட்டின் அன்றாடச் சமையலுக்கு உப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உப்பை வேறு சிலவற்றுக்கும் பயன்படுத்தலாம்:

உடல் துர்நாற்றத்தை நீக்க: உப்பை எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து, துணிகளில் தேய்த்தால் துர்நாற்றம் அகலும்.

எண்ணெயை அகற்ற: எண்ணெய் வடியும் பானைக்கு மேல் உப்பைத் தூவி 20 நிமிடத்துக்குப் பிறகு கழுவினால் எண்ணெய் விலகிவிடும்.

காலணிகளின் துர்நாற்றத்தை நீக்க: காலணி மீது சிறிதளவு உப்பைத் தூவினால் ஈரத்தை உப்பு உறிஞ்சி நாற்றத்தைப் போக்கிவிடும்.

இரத்தக்கறையை அகற்ற: உப்பு கரைக்கப்பட்ட குளிர்ந்த நீரில் இரத்தக்கறை படிந்த துணியை ஊறவைத்து, சோப்பு கலந்த வெந்நீரில் கொதிக்கவிட்டால் இரத்தக்கறை அகன்றுவிடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்