Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காற்பந்துப் பிரபலம் டேவிட் பேக்கம் சிங்கப்பூருக்கு வருகை

சிங்கப்பூரிலிருந்து அவர் கோலாலம்பூருக்குச் செல்வார். சிங்கப்பூரர்கள் பெக்கமை நேரில் கண்டு பேசிப் பழக வாய்ப்புக் கிட்டும்.

வாசிப்புநேரம் -
காற்பந்துப் பிரபலம் டேவிட் பேக்கம் சிங்கப்பூருக்கு வருகை

(படம்: TODAY )

மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழுவின் முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் டேவிட் பெக்கம் அடுத்த மாதம் சிங்கப்பூருக்கு வருகிறார்.

AIA காப்புறுதிக் குழுமத்தின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான வாழ்க்கை எனும் சுற்றுலாவை முன்னிட்டு அவர் இங்கு வருகிறார்.

42 வயது டேவிட் பேக்கம் கிளிஃப்போர்ட் சதுக்கத்தில் அடுத்த மாதம் 21ஆம் தேதி உரையாற்றவிருக்கிறார்.

 உடல்நலனில் அக்கறை கொள்ளவும் குறிப்பாக ஆரோக்கிய உணவு, ஊட்டச்சத்து போன்றவற்றுக்கு முக்கியத்துவமளிக்கவும் அவர் ஊக்குவிப்பார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

சிங்கப்பூரிலிருந்து அவர் கோலாலம்பூருக்குச் செல்வார்.

சிங்கப்பூரர்கள் பெக்கமை நேரில் கண்டு பேசிப் பழக வாய்ப்புக் கிட்டும்.
அதற்கான சமையல் போட்டி ஒன்று இப்போது நடந்துவருகிறது.

உள்ளூரின் பிரபல உணவு வகைகளை ஆரோக்கியமான முறையில் போட்டியாளர்கள் சமைக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர் குழுக்களாகச் செயல்பட வேண்டும். சமைத்த உணவின் புகைப்படத்தையும் விவரங்களையும் AIA-இன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

இறுதிப் போட்டிக்காக ஆறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
பெக்கமைச் சந்திப்பதோடு, $10,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்