Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிறுகக் கட்டிப் பெருக வாழ் - பணத்தைப் படிப்படியாகச் சேமிப்பது எப்படி?

மாத இறுதியில் வங்கிக் கணக்கைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறதா? நமது அன்றாட வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்தால் கணிசமான தொகையைச் சேமிக்கலாம். 

வாசிப்புநேரம் -
சிறுகக் கட்டிப் பெருக வாழ் - பணத்தைப் படிப்படியாகச் சேமிப்பது எப்படி?

(படம்: Channel NewsAsia)

மாத இறுதியில் வங்கிக் கணக்கைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறதா?

நமது அன்றாட வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்தால் கணிசமான தொகையைச் சேமிக்கலாம். 

1) பெரிய கடன்களை விரைவில் தீர்க்கவும்

வட்டி சிறிய அளவில் இருந்தாலும் நாளடைவில் வட்டி குட்டி போட்டு அது பெருந்தொகையாகி விடும். எனவே காலத்தைக் குறித்து வைத்துச் சீக்கிரமாகக் கடனைத் தீர்க்கும் வழிகளைப் பாருங்கள். 

2) தினமும் கடைகளில் சாப்பிடுவதற்குப் பதிலாக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்லவும்

வீட்டில் தயாரிக்கப்படும் உணவு பணத்தை மிச்சப்படுத்த உதவும். கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளைவிட அதில் அன்பும், ஆரோக்கியமும் அதிகம். 

3) எந்தப் பொருளை வாங்குவதற்கும் அவசரப்பட வேண்டாம்.

விருப்பப்பட்ட பொருளை உடனடியாக வாங்கும் முன், அது ஏன் தேவை எதற்கு உபயோகோப்படும் என்ற கேள்விகளுக்கு விடை காணவும். நன்கு யோசித்து ஓரிரு வாரங்களுக்குப் பின் தேவையான பொருளை வாங்கலாம். அவகாசம் எப்போதும் ஆறுதல் தரும்.

4) தேவையில்லாத பொருட்களை மறுவிற்பனை செய்யலாம்

நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை மறுவிற்பனை செய்ய Carousell, eBay போன்ற இணைத்தளங்கள் உள்ளன. மறுவிற்பனை செய்வதில் கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைக்கலாம்.

5) மின்சாரம், தண்ணீர் பயனீட்டைக் குறைக்கவும்

ஓர் அறையை விட்டு வெளியேறும் முன் விளக்குகளை அணைத்துவிடுங்கள். தட்டுகளைக் கழுவும்போது தண்ணீர்க் குழாயை அடைத்துவிடுங்கள். அடிக்கடி மறந்து மின்சாரத்தையும் தண்ணீரையும் நாம் விரயம் செய்கிறோம், இதனால் அவற்றுக்கான பயனீட்டுக் கட்டணம் உயரும். தேவைப்படும்போது இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தினால் கொஞ்சம் சேமிக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்