Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தகங்கள் வாசிப்பவர்கள் நல்ல குணம் படைத்தவர்கள்: ஆய்வு

நல்ல மனிதனாக ஆக விரும்புகிறீர்களா?

வாசிப்புநேரம் -

நல்ல மனிதனாக ஆக விரும்புகிறீர்களா?

அதற்கு நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது புதிய ஆய்வு.

லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கல்கலைக்கழகம் ஆய்வை நடத்தியது.

அதில், சுமார் 123 பேர் கலந்துகொண்டனர்.

புத்தகங்கள், தொலைகாட்சி, நாடகங்கள் ஆகியவற்றில் அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிய கேள்விகள் பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு எந்தளவு மதிப்பளிக்கிறார்கள் எனவும் மற்றவர்களுக்கு உதவுவதில் எந்தளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

தொலைகாட்சி பார்ப்பவர்களுடன் ஒப்பிடுகையில் புத்தகம் வாசிப்பவர்கள் சமூக நடவடிக்கையில் அதிகம் ஈடுபட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொலைகாட்சிப் பிரியர்கள் குறைந்த நட்புரிமையுடன் பழகுபவர்களாகவும் மற்றவர்களின் கண்ணோட்டத்தைக் குறைந்த அளவே புரிந்து வைத்திருப்போராகவும் கருதப்படுகின்றனர்.

நாம் தேர்தெடுக்கும் புத்தகம் நம்முடைய உணர்வுசார்ந்த நுண்ணறிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

புதினங்களை வாசிப்போர் நேர்மறையான சமூகப் போக்கு உடையவர்களாகவும், நாடகம், காதல் நாவல்கள் ஆகியவற்றை வாசிப்பவர்கள் பரிவுமிக்கவர்களாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்