Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இந்த உணவுகளும் திரும்ப வந்தால் நன்றாக இருக்குமே!

உணவு என்று வரும்போது, சிங்கப்பூரில் தெரிவுகள் ஆயிரமாயிரம். ஆனால் எத்தனை புதுவிதமான உணவுகளைச் சுவைத்தாலும், மேலும் புதிது புதிதாகச் சுவைத்துப் பார்க்க நமது உள்ளம் துடிக்கிறது. 

வாசிப்புநேரம் -

உணவு என்று வரும்போது, சிங்கப்பூரில் தெரிவுகள் ஆயிரமாயிரம்.

ஆனால் எத்தனை புதுவிதமான உணவுகளைச் சுவைத்தாலும், மேலும் புதிது புதிதாகச் சுவைத்துப் பார்க்க நமது உள்ளம் துடிக்கிறது.

விரைவு உணவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல!
அண்மையில் ரூட் பியர் பானத்துக்குப் பெயர்போன A&W உணவகம், அடுத்த ஆண்டு முதல் மீண்டும் சிங்கப்பூரில் செயல்படப்போவதாக அறிவித்தது.

பலருக்கு இது உற்சாகமூட்டியது.

வேறு என்னென்ன விரைவு உணவுகள் சிங்கப்பூருக்கு மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தார், சேனல் நியூஸ் ஏஷியாவின் ரமேஷ் வில்லியம்ஸ்.


மெக்டோனல்ட் உணவகத்தின் முட்டையுடன் கூடிய Sausage McGriddles

(படம்: McDonald )

2014க்குப் பிறகு கைவிடப்பட்ட இந்த உணவு இனிப்பு, உப்புச் சுவைகளைக் கலவையாகத் தந்து, காலை வேளையை உற்சாகப்படுத்திவந்தது.

பர்கர்கிங் உணவகத்தின் BK SHOTS

2011ஆம் ஆண்டு சில மாதங்கள் மட்டுமே அறிமுகமான இந்த பர்கர் வகை, வெண்ணெய் கலந்த முட்டை சேர்த்த சுவையான உணவு.

KFC உணவகத்தின் பரிமாறும் சேவை

(படம்: Reuters)

கெண்டக்கி ஃபிரைட் சிக்கன் என்று வழங்கப்பட்டபோது, பரிமாறும் அமைப்பு இருந்தது. அது பின்னர், KFC என்று மாற்றப்பட்டபோது, சுகமான பரிமாறும் சேவையும் போய்விட்டது.

பாப்பய் உணவகத்தின் Prawn Poppers

(படம்: AFP)

பலரை நாவூற வைத்த பாப்பய் உணவகத்தின் இந்த பொறித்த ஊடான் உணவு திடீரென்று நிறுத்தப்பட்டு, பலரின் மனதை நோகடித்தது.

வெண்டி விரைவு உணவகம்

(சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம்)

2015ஆம் ஆண்டு மூடப்பட்ட வெண்டி உணவகம் சிங்கப்பூருக்கு மீண்டும் வருகிறது என்ற செய்தி வராதா என்று பலரும் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்