Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கையடக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகள் பேசுவதில் தாமதம் ஏற்படலாம்

அமெரிக்கக் குழந்தைகளில் சராசரியாக 20 விழுக்காட்டினர் ஒரு நாளுக்கு குறைந்தது 28 நிமிடங்கள் கையடக்கச் சாதனங்களில் செலவிடுகின்றனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்கா : அமெரிக்கக் குழந்தைகளில் சராசரியாக 20 விழுக்காட்டினர் ஒரு நாளுக்கு குறைந்தது 28 நிமிடங்கள் கையடக்கச் சாதனங்களில் செலவிடுகின்றனர்.

கைபேசி அல்லது கைக் கணினிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிட்டால், அவர்கள் பேச ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சான் ஃபிரான்சிஸ்கோவில் ஆண்டுதோறும் நடக்கும் குழந்தைகள் மருத்துவக் கல்விச் சங்கத்தின் கூட்டத்தில்  புதிய ஆய்வின் விவரங்கள், அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளன. 

ஒவ்வொரு நாளும் சுமார் அரைமணி நேரம், கையடக்கச்  சாதனங்களைப் பயன்படுத்துவதால் உணர்ச்சிபூர்வமான உரையாடலில் கலந்துகொள்வதில் குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமம் 50 விழுக்காடு அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது.

மூவாண்டு காலம், 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள 894 குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன. 

18 மாதத்தில் சோதனை நடைபெறும்போது, குழந்தைகளில் 20 விழுக்காட்டினர் கையடக்கச் சாதனங்களில் சுமார் 28 நிமிடங்களைச் செலவிடுவதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவுக்கெவ்வளவு பிள்ளைகள் கையடக்கச் சாதனங்களில் கூடுதலான நேரம் செலவிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் பேசுவதில் தாமதம் ஏற்படுகிறது. 

அதனால், 18 மாதங்களுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு, எந்தவிதமான மின்னியல் திரைகளைப் பார்ப்பதையும் தவிர்க்குமாறு ஆய்வாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். 



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்