Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரத்த அழுத்தம் குறைய பீட்ரூட் சாறு

தினமும் ஒரு கிண்ணம் பீட்ரூட் சாற்றைக் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறையும் என அண்மை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

வாசிப்புநேரம் -
ரத்த அழுத்தம் குறைய பீட்ரூட் சாறு

பீட்ரூட் சாறு.

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறையும் என அண்மை ஆய்வுகள் காட்டுகின்றன.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 4 வாரங்களுக்கு தினமும் பீட்ரூட் சாறு குடித்தனர். அதன் பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் 8/4 mmHg அளவுக்கு குறைந்ததாக  பிரிட்டனின் Queen Mary University of London பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
மாரடைப்பால் நிகழும் மரணங்களுக்கு ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரத்த அழுத்த அளவில் ஒவ்வொரு 2 mmHg உயர்வுக்கு, இதய நோயால் மரணம் ஏற்படும் அபாயம் 7 விழுக்காடு அதிகரிக்கிறது; பக்கவாதத்தால் மரணம் ஏற்படும் அபாயம் 10 விழுக்காடு அதிகரிக்கிறது.

2014ஆம் ஆண்டில் மரணமடைந்த சிங்கப்பூரர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் மாரடைப்பால் அல்லது பக்கவாதத்தால் மாண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்