Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வயிற்று எரிச்சலை தவிர்ப்பது எப்படி?

அண்மைய ஆய்வு ஒன்றின்படி, பத்தில் எட்டு பேருக்கு வயிற்றின் அமிலத்தால் ஏற்படும் எரிச்சலும் நெஞ்செரிச்சலும் ஏற்படுகின்றன. அதிக அளவு காரண உணவு சாப்பிடுதல் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் அவற்றிற்கு முக்கிய காரணங்கள். 

வாசிப்புநேரம் -

அண்மைய ஆய்வு ஒன்றின்படி, பத்தில் எட்டு பேருக்கு வயிற்றின் அமிலத்தால் ஏற்படும் எரிச்சலும் நெஞ்செரிச்சலும் ஏற்படுகின்றன. அதிக அளவு காரமான உணவு சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் அவற்றிற்கு முக்கிய காரணங்கள்.

இந்த பிரச்சினையை சரிசெய்ய மாத்திரைகளை சாப்பிட்டு வருவோம். ஆனால் எப்போதும் antacid மாத்திரையை உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உபாதை வராமலிருக்க சில நல்ல பழக்கங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம் . 


தவிர்க்க வேண்டியவை


சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களில் உள்ள சாற்றில் அமிலத் தன்மை உள்ளது.. எனவே ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்: காரமான உணவுகள் மற்றும் சமோசா, பர்கர், பிட்சா போன்ற உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சாக்லேட், கேக் போன்றவற்றையும் அதிக அளவில் சாப்பிடக்கூடாது.

அதிகமாக உண்ணுதல்: ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உணவுகளை வயிறு எளிதில் செரிக்க முடியாமல் போகும்.

உண்டபின் பின் உடனே உறங்குதல்: சிலர் உணவை உட்கொண்ட உடனேயே தூங்குவார்கள். இப்படி தூங்கினால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, செரிமான பிரச்சனைகளான அசிடிட்டி போன்றவை ஏற்படக்கூடும்.

அத்துடன் மதுபானம், சிகரெட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

செய்ய வேண்டியவை: உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அமிலத்தின் அளவு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்