Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

யோகா செய்யுங்கள் நோயை விரட்டுங்கள்!

யோகாசனம், தியானம் போன்றவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்யவைப்பதன் மூலம், நோயாளிகள் மருத்துவச் சேவைகளை நாடுவதைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்று காட்டுகிறது. 

வாசிப்புநேரம் -
யோகா செய்யுங்கள் நோயை விரட்டுங்கள்!

(படம்: REUTERS/Lucy Nicholson)

யோகாசனம், தியானம் போன்றவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்யவைப்பதன் மூலம், நோயாளிகள் மருத்துவச் சேவைகளை நாடுவதைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்று காட்டுகிறது. 

அதன் தொடர்பில் சுகாதாரப் பராமரிப்பாளர்கள் அளித்த நாலாயிரத்து நானூற்றுக்கும் அதிகமான நபர்களின் தகவல்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் ஓராண்டுக்கு, Boston நகரின், Massachusetts பொது மருத்துவமனையின் மன-உடல்நல மருத்துவ நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு உடலையும் மனத்தையும் தளர்த்தும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. 

பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு ஓராண்டுக்கு முன்னர் இருந்த அவர்களது உடல்நிலையும், பயிற்சியை எடுத்த ஓராண்டுக்கு பிறகு இருந்த உடல்நிலையும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. 

43 விழுக்காட்டினர், சுகாதாரச் சேவைகளை நாடுவது குறைந்திருந்தது அதில் தெரியவந்தது. 

யோகாசனம், தியானம் ஆகியவற்றால் உடலுக்கும் மனத்துக்கும் ஏற்படும் அனுகூலங்களைக் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருப்பதை ஆய்வாளர் Dr. James Stal சுட்டினார். 

மருத்துவரை நாடுவதை அவை எந்த அளவு குறைக்க உதவுகின்றன என்பதைக் காட்ட, அண்மைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்