Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வெங்காயத்தால் முடிப்பிரச்சனைகள் எவ்வாறு தீரும்?

முடிப்பிரச்சனைகள் பல்வகை உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், அத்தகைய பிரச்சனைகளுக்குச் சுமுகமான தீர்வு கிடைக்கும். 

வாசிப்புநேரம் -

அன்றாட வீட்டுப் பொருளான வெங்காயம், கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெங்காயத்தில் கந்தகம் (sulphur) அதிகம் உள்ளது. பொதுவாக, கந்தகம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.

1. முதலில் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.

2. பின், நன்கு அரைத்து வைக்கப்பட்ட வெங்காய பசையை தலையில் தேய்க்கவேண்டும்.

3. சற்று நேரத்திற்குப் பிறகு சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்