Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

துன்புறுத்தப்படும் பிள்ளைகளுக்கு இதயநோய் அபாயம் அதிகம்

சிறுவயதில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் உடற்பருமன் மற்றும்  இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம். இது பிரிட்டிஷ் உளவியலாளர்கள் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்பாகும்.

வாசிப்புநேரம் -
துன்புறுத்தப்படும் பிள்ளைகளுக்கு இதயநோய் அபாயம் அதிகம்

மனித இதயத்தின் மாதிரி வடிவம். (படம்: Reuters)

சிறுவயதில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் உடற்பருமன் மற்றும்  இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம். இது பிரிட்டிஷ் உளவியலாளர்கள் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்பாகும்.

சிறுவயதில் துன்புறுத்தலுக்கு இலக்காகாத பெண்களில் 19 விழுக்காட்டினர் பெரியவர்கள் ஆகும்போது அதிகப் பருமன் ஆகின்றனர். சிறுவயதில்  துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கோ, அந்த விகிதம் 25 விழுக்காட்டிற்கு மேல். உடற்பருமன் மட்டுமின்றி துன்புறுத்தப்பட்டவர்களுக்கு  ரத்த அழற்சி அதிகம் ஏற்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

பள்ளிக்கூடத்தில் சக பிள்ளைகளைத் துன்புறுத்துவோரைக் கண்டிப்பதில் மட்டும் ஆசிரியர்கள் கவனம் செலுத்தினால் போதாது என்று ஆய்வை நடத்திய Louise Arseneaultகூறினார். துன்புறுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார் அவர். அத்தகைய முயற்சிகள் நல்ல விளைவுகளை உண்டாக்கலாம் என்றும் அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்