Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மலர்களின் மகத்துவம்

பூக்களை அழகுப் பொருளாகவும் நறுமணத் திரவியங்களைத் தயாரிப்பதற்காகவும் பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், காய்களிலும் பழங்களிலும் இலைகளிலும் எப்படி மருத்துவ குணங்கள் உள்ளதோ பூக்களிலும் உள்ளன என்ற தகவலை பலர் அறியார். பூக்கள் சிலவற்றின் மருத்துவ குணங்கள் இவை:

வாசிப்புநேரம் -

அல்லி

அல்லிப் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

சூரிய காந்தி

சூரிய காந்திப் பூவிலுள்ள விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

தாமரை

தாமரை பூ இதயத்திற்கு பலமளிக்கும். உடல் வெப்பத்தை நீக்கி, தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

வேப்பம் பூ

வேப்பம் பூ சிறந்த கிருமி நாசி‌னி. வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும்.
வயிறு சுத்தமாகவும், தொண்டைப் புண் ஆறவும் காது ரணம் நீங்கவும் இப்பூ கைக்கண்ட மருந்து.

தூதுளம் பூ

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்