Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உடலுறுப்புகளின் அறிகுறிகளை வைத்து நோயைக் கண்டுபிடிக்க முடியுமா?

கண் இமைகளில் வலி ஏற்பட்டால்....என்ன பிரச்சினை? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம். மேலும் மெக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளிலும் வலி உண்டாகிறது.

வாசிப்புநேரம் -

1.) கண் இமைகளில் வலி ஏற்பட்டால்....என்ன பிரச்சினை?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம். மேலும் மெக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளிலும் வலி உண்டாகிறது.

என்ன செய்யலாம்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.) கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்.. என்ன பிரச்சினை?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த மனஉளைச்சலால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்குத் திடீரென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகின்றன.

என்ன செய்யலாம்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாகக் காப்பி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

3.) கண்கள் உலர்ந்து போவது.. என்ன பிரச்சினை?

நாம் குளிர்சாதன வசதி நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றன.

என்ன செய்யலாம்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

4.) தோலில் தடிப்புகள் ஏற்படுதல்: என்ன பிரச்சினை?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதயக் கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று மருத்துவர்களுக்கே இன்னும் சரிவரப் புரியவில்லை என்கிறார்கள்.

என்ன செய்யலாம்: அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்