Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உடலுறுப்புகளின் அறிகுறிகளை வைத்து நோயைக் கண்டுபிடிக்க முடியுமா? - பாகம் 2

முகம் வீக்கமாக இருப்பது… என்ன பிரச்சினை? உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. அப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த உயிரணுக்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

வாசிப்புநேரம் -

1.) முகம் வீக்கமாக இருப்பது… என்ன பிரச்சினை?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. அப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த உயிரணுக்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

என்ன செய்யலாம்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

2.) தோல் இளம் மஞ்சளாக மாறுவது… என்ன பிரச்சினை?

தோல் இளம் மஞ்சளாக மாறினால் கல்லீரல் நோய்க்கான அறிகுறியாகும். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. அதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

என்ன செய்யலாம்: அதிகப்படியான மது அருந்துவதால் அப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

3.) பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்… என்ன பிரச்சினை?

சீரான ரத்த ஓட்டமின்மையே அதற்குக் காரணம். ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. அந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

என்ன செய்யலாம்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

4.) பாதம் மட்டும் மரத்துப் போதல்… என்ன பிரச்சினை?

அது நீரிழிவு நோயின் பாதிப்பே ஆகும். நீரிழிவு நோய், ரத்தத்திலிருக்கும் உயிரணுக்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. அதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

என்ன செய்யலாம்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட நீரிழிவு நோய் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்