Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானத்தில் பயணம் செய்ய சிறந்த நேரம் என்ன?

விமான நிலையம் சென்றால் திட்டமிட்டபடி விமானம் ஏறிவிடுவோம் என்று சொல்லமுடியாது. நம்மில் சிலர் தாமதங்களை எதிர்நோக்கியிருப்போம். அதனால் இணைப்பு விமானச் சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்பையும் இழந்திருப்போம்.

வாசிப்புநேரம் -
விமானத்தில் பயணம் செய்ய சிறந்த நேரம் என்ன?

படம்: Pixabay

விமான நிலையம் சென்றால் திட்டமிட்டபடி விமானம் ஏறிவிடுவோம் என்று சொல்லமுடியாது. நம்மில் சிலர் தாமதங்களை எதிர்நோக்கியிருப்போம். அதனால் இணைப்பு விமானச் சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்பையும் இழந்திருப்போம்.

காலை வேளையில் பயணம் செய்தால் விமானத் தாமதங்களைத் தவிர்க்கலாம் எனப் புது ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

காலை 6 மணியிலிருந்து காலை 7 மணி வரையிலான நேரம் தான் விமானத்தில் பயணம் செய்வதற்குச் சிறந்த நேரமாகக் கருதப்படுகின்றது.போக்குவரத்துப் புள்ளிவிவரத் துறை சேகரித்த தகவல்கள் அதனைத் தெரிவிக்கின்றன.

அந்த நேரத்தில் புறப்பட்ட விமானங்கள் சராசரியாக 8.6 நிமிடங்கள் தான் தாமதமாகச் சென்றன. பகல் பொழுது செல்லச்செல்ல ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒரு நிமிடத் தாமதம் ஏற்படுகிறது.

ஆக அதிகமாகத் தாமதம் ஏற்படும் நேரம் என்று பார்த்தால் அது மாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை. அதுவே இரவு 9 மணிக்குப் பிறகு தாமதம் 20 நிமிடங்களுக்குமேல்.

இதைப் படிக்கும் பலரும் நம் வேலைக்குத் தகுந்தாற்போல்தானே பயண நேரத்தைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று எண்ணுவர்.

இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்றும் யோசிக்கக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்