Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமான இருக்கையின் மேல் உள்ள முக்கோண ஒட்டுவில்லைகளின் அர்த்தம் என்ன?

விமானத்தில் நீங்கள் அடுத்தமுறை பயணம் செய்யும்போது, விமான இருக்கைக்கு மேலே பக்கவாட்டுச் சுவரைச் சற்று உன்னிப்பாக கவனியுங்கள். 

வாசிப்புநேரம் -
விமான இருக்கையின் மேல் உள்ள முக்கோண ஒட்டுவில்லைகளின் அர்த்தம் என்ன?

படம்: REUTERS/Toru Hanai

விமானத்தில் நீங்கள் அடுத்தமுறை பயணம் செய்யும்போது, விமான இருக்கைக்கு மேலே பக்கவாட்டுச் சுவரைச் சற்று உன்னிப்பாக கவனியுங்கள்.

பக்கத்துக்கு இரண்டு என, நீங்கள் நான்கு முக்கோண ஒட்டுவில்லைகளைக் காண இயலும்.

அவை கறுப்பாகவோ சிவப்பாகவோ இருக்கலாம்.

பயணிகளுக்கு அந்த முக்கோணங்கள் அவ்வளவு முக்கியம் இல்லையென்றாலும் விமானிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் அவை மிக முக்கியம்.

விமானத்தின் இறக்கைகள் எங்கே உள்ளன என்பதைக் கண்டறிய அந்த முக்கோணங்கள் அவர்களுக்கு உதவுகின்றன.

ஒரு முக்கோணம் இறக்கையின் முன்பகுதியைக் குறிக்கும் வகையிலும் மற்றொன்று அதே இறக்கையின் பின்பகுதியைக் குறிக்கும் வகையிலும் ஒட்டப்பட்டிருக்கும்.

அடர்த்தியான பனிப் பொழிவு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இறக்கை பாகங்களில் கோளாறு ஏற்பட்டால், சிப்பந்திகள் சரியான இடத்துக்குச் சென்று கண்ணாடிச் சன்னல் வழியாக அதைப் பார்வையிட, இந்த முக்கோண வில்லைகள் அடையாளமாகப் பயன்படுகின்றன.

மேலும் விமானமே, அதன் இறக்கைப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது என்பதால் அங்கு அதிகமான அதிர்வுகள் இருக்கமாட்டா.

இறக்கைப் பகுதியை அச்சாணியாகக் கொண்டே விமானம் மேலும் கீழும் அசைகிறதாம்.

ஆகவே அந்தப் பகுதியில் அமரும் பயணிகள், சீசாப் பலகையின் நடுவில் அமர்வதைப் போல் அதிக அசைவின்றி சுகமான பயணத்தை அனுபவிக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்