Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வாடிக்கையாளர்களை மீன் பிடித்து உண்ண வைக்கும் உணவகம்

பெரும்பாலும் நாம் உணவங்களுக்குச் சென்றால், உணவு நம்மை தேடி வரும். ஆனால் ஜப்பானிய உணவகம் ஒன்றில் உணவைத் தேடி நீங்கள் செல்ல வேண்டும். 

வாசிப்புநேரம் -
வாடிக்கையாளர்களை மீன் பிடித்து உண்ண வைக்கும் உணவகம்

படம்: ZAUO

பெரும்பாலும் நாம் உணவங்களுக்குச் சென்றால், உணவு நம்மை தேடி வரும். ஆனால் ஜப்பானிய உணவகம் ஒன்றில் உணவைத் தேடி நீங்கள் செல்ல வேண்டும்.

உணவகத்திற்குச் சாப்பிட வருபவர்கள் மீன்களை பிடித்தால்தான் சாப்பிட முடியும்.

"ஸௌவோ" என்று அழைக்கப்படும் இந்த உணவகம் ஜப்பானில் 13 கிளைகளைக் கொண்டுள்ளது. விரைவில் நியூயார்க்கிலும் ஒரு கிளை திறக்கப்படும்.

உணவகத்திற்குள் சென்றால் சிறிய ஓடையைப் அதில் 10 வகையான மீன்கள் நீந்துகின்றன. மீன் பிடிக்கும் சிறிய தூண்டில் போன்ற சாதனத்தைக் கொண்டு விரும்பிய மீன்களைப் பிடித்துக்கொள்ளலாம்.

எவ்வளவு முயன்றும் மீன் வலையிலிருந்து நழுவினால் பயப்பட வேண்டாம், உணவக ஊழியர்கள் உதவிக்கு வருவர்.

பிடித்த மீன்களை "பிடித்த" வகையில் சமைத்துத் தருகின்றனர் உணவகத்தின் சமையல் வள்ளுநர்கள். சொந்தமாக மீன்களைப் பிடிப்பதால் உணவு வகைகள் சுமார் 7.50 டாலர் குறைவாக விற்கப்படுகின்றன.

இதனால் உணவகத்தில் சாப்பிடுவோருக்கு வயிறு நிறையும். அதேவேளை அவர்களுடைய பணப்பையின் கனம் அதிகம் குறையாது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்