Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ருசியான கோழிச்சோறு எங்கே கிடைக்கும்?

சிங்கப்பூரர்களிடையே பிரபலமான உணவு வகைகளில் ஒன்று ஹைனானீஸ் கோழிச்சோறு (Hainanese Chicken Rice). ருசியான ஹைனானீஸ் கோழிச்சோறு சாப்பிட எங்கு செல்லலாம்?

வாசிப்புநேரம் -
ருசியான கோழிச்சோறு எங்கே கிடைக்கும்?

(படம்: CNA/ Charles H)


சிங்கப்பூரர்களிடையே பிரபலமான உணவு வகைகளில் ஒன்று ஹைனானீஸ் கோழிச்சோறு (Hainanese Chicken Rice).

ருசியான ஹைனானீஸ் கோழிச்சோறு சாப்பிட எங்கு செல்லலாம்?

(படம்: CNA/ Pow Sing Restaurant)

1. POW SING கிச்சன்

காப்பிக் கடையாக ஆரம்பித்தது வசதியான உணவகமாக மாறியிருக்கிறது. ஆனால் சுவையில் மாற்றமில்லை.

ருசியான மிளகாய்ச் சாந்து, கோழியுடன், சிறிதளவு எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது ஒரு தனி இன்பம்!

முகவரி: 59 சிராங்கூன் கார்டன் வே

(படம்: CNA/ Annette Tan)

2. ZI JIN ஹைனானீஸ் எலும்பில்லாத கோழிச்சோறு

கோழிச்சோற்றின் ருசி அதனுடன் பரிமாறப்படும் மிளகாய்ச் சாந்தில்தான் அடங்கியுள்ளது என்று கூறுபவர்கள் பலர்.

அவர்களுக்கு ஏற்ற கடை இது!

இந்தக் கடையில் கோழி ஈரலும் பிரபலம்.

முகவரி: அலெக்சாண்டிரா வில்லேஜ் உணவு நிலையம் (Alexandra Village Food Centre), 120 புக்கிட் மேரா லேன் 1, #01-15

(படம்: CNA/ Xing Yun Hainanese Boneless Chicken Rice Facebook)

3. XING YUN ஹைனானீஸ் எலும்பில்லாத கோழிச்சோறு

இந்தக் கடையில் எளிமையான முறையில், சுவையான கோழிச்சோறு கிடைக்கும்.

சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் இருக்கும்போது கோழிச்சோறு சாப்பிடும் ஆசை வந்தால் நிச்சயம் இங்கு வர வேண்டும்!

முகவரி: யூஹுவா சந்தை மற்றும் உணவு நிலையம் (Yuhua Market and Food Centre), 347 ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1, கடை 202 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்