Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மின்னும் காப்பி - மிதக்கும் வண்ணத் துகள்!

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடைவரை அனைத்தையும் இணையவாசிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

வாசிப்புநேரம் -
மின்னும் காப்பி - மிதக்கும் வண்ணத் துகள்!

(படம்: Instagram)

 காப்பி பிரியர்களுக்கு மேலும் ஒரு வித்தியாசமான வகைக் காப்பி அறிமுகம் கண்டுள்ளது.

பார்ப்பதற்குப் பளிச்சென்று மின்னும் இந்தக் காப்பியை அழகு பார்ப்பதோடு மட்டுமின்றி சுவைத்தும் பார்க்கலாம்!

இந்தியாவின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் மின்னும் துகள் கொண்ட புதிய வகைக் காப்பி பிரபலமாகிவருகிறது.

Coffee By Di Bella என்ற நிறுவனம், மும்பை முழுதும் கிளைகளைக் கொண்டுள்ளது.

தொடர்ந்து புத்தாக்கத்தைக் கையாள விரும்பிய அந்த நிறுவனம், வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த விரும்பியதாகக் கூறியது.

சமூக ஊடகத்தின் தாக்கமும் இப்போது அதிகம்.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அனைத்தையும் இணையவாசிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

அதற்கேற்ப காப்பி வகைகள் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி பிரிட்டனிலும் மின்னும் காப்பிகள் சுடச்சுட விற்பனையாகின்றன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்