Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒப்பனை கண்-ஒட்டுவில்லைகளால் பார்வை பறிபோகலாம்

வெறும் அழகுக்காக அணியப்படும் கண்-ஒட்டுவில்லைகளால் கண்களில் நோய் பரவக்கூடும், அல்லது கீறல்கள் ஏற்படக்கூடும் என்று கண் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஒப்பனை கண்-ஒட்டுவில்லைகளால் பார்வை பறிபோகலாம்

படம்: AP

வெறும் அழகுக்காக அணியப்படும் கண்-ஒட்டுவில்லைகளால் கண்களில் நோய் பரவக்கூடும், அல்லது கீறல்கள் ஏற்படக்கூடும் என்று கண் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தகைய ஒட்டுவில்லைகள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செய்முறைகளோடு விற்கப்படுவதில்லை.

ஒட்டுவில்லைகளை மற்றவர்களோடு பகிரவோ, குழாய் நீரில் வைக்கவோ கூடாது என்றும், தூங்கும்போது அவற்றைக் கழற்றி விட வேண்டும் என்றும் கண் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இது கண் பார்வையைப் பாதிக்கக்கூடும். சில நேரங்களில் கண் பார்வையை முற்றிலுமாக இழக்கவும் நேர்ந்திடலாம்.

ஒப்பனை கண்-ஒட்டுவில்லைகளைப் பயன்படுத்தும்போது நினைவில் கொள்ளவேண்டியவை:

-ஒட்டுவில்லைகளின் பாதுகாப்பை கண்மருத்துவர் உறுதி செய்ய வேண்டும்.

-ஒட்டுவில்லைகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் சுத்திகரிப்புத் திரவத்தைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்ய வேண்டும்.

-இரவு முழுவதும் ஒட்டுவில்லைகளைக் கண்களில் அணிந்திருக்கக்கூடாது.

-ஒட்டுவில்லைகளை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது.

-குளிக்கும்போது அல்லது நீச்சல் குளத்தில் நீந்தும்போது, ஒட்டுவில்லைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்