Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சோழ வரலாறு பாகம் 4 - " தஞ்சை பெரிய கோயில்"

ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்ட காரணம் என்ன என்று விளக்குகிறார் முனைவர்

வாசிப்புநேரம் -

தமிழகத்தை சோழர் ஆண்ட காலத்தை பொற்காலம் என்பர் வரலாற்று ஆசிரியர்கள். ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன், தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என்று பல வரலாற்று உண்மைகளை நம்முடன் இங்கு பகிர்ந்துகொள்கிறார் தொல்பொருள், வரலாற்று வல்லுநர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம்.

இவர் தஞ்சையில் சரபோஜி மகராஜாவால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தின் பதிப்பக மேலாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார்.. 100க்கும் மேற்பட்ட பழங்காலக் கல்வெட்டுக்களையும், பழங்கால நாணயங்கள், செப்புத் தகடுகள், சிலைகள் போன்ற பலவற்றைக் கண்டுபிடித்து தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். 25க்கும் மேற்பட்ட நூல்களும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தமிழ் மொழி விழாவில் கலந்துகொள்ள அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த அவரை மீடியாகார்ப் செய்தி சந்தித்தது. அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தந்த அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்துக்கு எங்கள் நன்றி 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்