Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

முதுமொழிக்காஞ்சி - சிந்தனைகள் ஐந்து (பாகம் 2)

சங்க காலத்தில் இயற்றப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி ஒன்றாகும். மதுரை கூடலூர் கிழார் என்பவர் அந்நூலை இயற்றியுள்ளார். 

வாசிப்புநேரம் -
முதுமொழிக்காஞ்சி - சிந்தனைகள் ஐந்து (பாகம் 2)

பழனியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்.

சங்க காலத்தில் இயற்றப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி ஒன்றாகும். மதுரை கூடலூர் கிழார் என்பவர் அந்நூலை இயற்றியுள்ளார். முதுமொழிக்காஞ்சி உருவாகி வருடங்கள் ஆயிரக்கணக்கில் உருண்டோடிப் போயிருந்தாலும் அதன் கருத்துகள் காலத்தால் அழியாதவை. இத்தொகுப்பில் மேலும் சில சிந்தனைகளைக் காண்போம்.

1. சோரா நல் நட்பு உதவியின் அறிப.

ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நல்ல நண்பர்களைப் பெற முடியும்.

2. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.

விருப்பமில்லாமல் கொடுத்தால் அது கொடைத்தன்மை ஆகாது.

3. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது

செய்ய இயலாதவற்றை 'நான் செய்வேன்' என்று கூறுவது முட்டாள்தனமாகும்.

4. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.

அறிவு இல்லாதவனின் துணையோடு இருப்பதைவிட தனியாக இருப்பதே சிறந்தது.

5. ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று

அன்பில்லாத தொடர்பு உறவுமாகாது நட்புமாகாது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்