Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அப்பாக்களுக்கு எங்கள் அஞ்சலி

உங்கள் தந்தையுடன் தினமும் 10 -15 நிமிடத்தையாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.  வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும்

வாசிப்புநேரம் -

"அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் மூலம் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை  புரிந்து கொள்ளலாம். பாசத்துக்கு எப்போதும் அன்னையைத் தான் உதாரணமாகக் கொள்கிறோம். எனினும்  தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

அப்பாவை மதிக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு புரிய வைப்பதே தந்தையர் தினத்தின் நோக்கமாகும். அன்னை, பத்து மாதம் நம்மை வயிற்றில் சுமந்தாலும், ஆயுள் வரை நம்மை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. அம்மாக்களைப் போல, அப்பாக்களுக்கு பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது.

நாம் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக, ஓயாமல் பாடுபட்டு,  "நான் பட்ட கஷ்டம்', என் பிள்ளையும் படக்கூடாது என்று வாயாற பேசி, மனமார உழைக்கும் நம் தகப்பனார்களை,  "கண் முன் நிற்கும் கடவுளாக" நாம் போற்ற வேண்டும். இருக்கும்போது மதிக்காமல், இறந்த பிறகு மாலை போட்டு மரியாதை செய்வதில் எந்த பயனும் இல்லை.

இருக்கும்போதே தந்தையை மதிக்க கற்றுத் தருவதே தந்தையர் தினத்தின் நோக்கம். உங்கள் அப்பாக்களுடன் தினமும் 10 -15 நிமிடத்தையாவது பகிர்ந்து கொள்ளுங்கள். நேரில் சென்று காண முடியவில்லை என்றால் தொலைபேசியிலாவது பேசுங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும். நாமும் நம் பிள்ளைகளும் செழித்து வாழ,பெற்றோர்களின் ஆசி முக்கியம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.


.தந்தையர் தினம் பிறந்த வரலாறு

அமெரிக்காவில் 1909ல் "சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார்.

இது தான், தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குத் தூண்டியது. அதன்படி 1910ம் ஆண்டில் முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக தந்தையர் தினம் அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தந்தையர்கள் அனைவருக்கும் "மீடியாகார்ப் செய்தி"யின் வாழ்த்துகள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்