Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலக நீரிழிவு நாள்: நீரிழிவு குறித்த தகவல்கள்

நீரிழிவு நாள் முன்னிட்டு அதன் தொடர்பான 3 குறிப்புகள்

வாசிப்புநேரம் -

இன்று உலக நீரிழிவு நாள்.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க அனைத்துலக நீரிழிவு சம்மேளனம் (International Diabetes Federation) 1991இல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.

அதனை முன்னிட்டு, நீழிவு தொடர்பான 3 குறிப்புகள்:

1. நீரிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உருளைக்கிழங்குகளை அளவோடு உண்ணலாம்.

உருளைக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் V, நார்ச்சத்து, பொட்டாசியம் (potassium) ஆகியவை உள்ளன. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை இவை அளிப்பதால் உருளைக்கிழங்குகளை உணவில் சேர்துக்கொள்வது நல்லது. ஆனால், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கில் அதிக அளவு மாவுச் சத்து இருப்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது.

2. நீரிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வகையான பழங்கள் உண்ணலாம்?

கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) குறைவாக உள்ள பழங்களையும் சர்க்கரை அதிகம் இல்லாத பழங்களை உண்பதும் நல்லது. பழங்களில் இயற்கையாகவே உள்ள சர்க்கரையும்கூட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆப்பிள், ஆரஞ்சு, பீச், பிளம், பேரிக்காய் (apple, orange, peach, plum, pear) ஆகிய பழங்களில் நார்ச்சத்து அதிகமாகவும் கிளைசெமிக் குறியீடு குறைவாகவும் இருப்பதால் அவற்றை உட்கொள்வதில் தவறில்லை.

3. நீரிழிவு நோய் இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படுகின்றது என்ற எண்ணம் தவறு

இனிப்பு சாப்பிடுவது மட்டும் நீரிழிவு நோயை விளைவிக்கின்றது என்ற சிலரின் கருத்து தவறு. நீரிழிவு நோய் இருவகைப்படும்.

முதல் வகை மரபியல் தொடர்பான காரணங்களால் ஏற்படும். உடல் உழைப்பு குறைவாகக் கொண்டிருப்பது, முறையான உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காதது, உயர் இரத்த அழுத்தம், வயது ஆகிய காரணங்களால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்