Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இவற்றையும் ஊடுருவ முடியுமா?

சாலை விளக்குகளை ஊடுருவுவதால் சாலை விபத்துகள் ஏற்படலாம். மொத்த போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு சாலை நெரிசல் ஏற்படலாம். கலிஃபோர்னியாவில் அண்மையில் சாலை விளக்குகள் ஊடுருவப்பட்டன.

வாசிப்புநேரம் -

இணைய ஊடுருவல்கள் பரவலாக இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் தனிநபர் தகவலைப் பாதுகாப்பது பலரின் முக்கிய கடமையாக உள்ளது. கணினி, கைபேசிகள் மட்டுமில்லாமல் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களும் ஊடுருவப்படலாம்.

அவற்றில் சில இதோ:

1) குளிர்பதனப் பெட்டி

அறிவார்ந்த குளிர்பதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவோர் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். இவ்வகையான வீட்டின் கம்பியில்லா இணையத் தொடர்பு முறையைப் (wi-fi) பயன்படுத்தி தனிநபர் தகவல்கள் ஊடுருவப்படலாம்.

கார் சாவிகளும் தற்போது மின்னிலக்கத் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அண்மையில் சீன ஊடுருவிகள் சிலர் கார் சாவிகளைப் போல பாவனை செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் விலை 22 டாலர் மட்டுமே. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோர் கார் சாவிக்கு அருகில் இருந்தால் போதும், காரைத் திறக்கும் தகவல் அதில் பதிவு செய்யப்பட்டுவிடும். அதைக் கொண்டு காரை எளிதாகத் திருடலாம்.

கட்டடங்களில் உள்ள விளக்குகள் மின்னியல் முறையில் இயங்குகின்றன.

ஊடுருவிகள் கட்டடத்தில் உள்ள விளக்குகளை அணைக்கவும் திறக்கவும் முடியும். இந்த ஆற்றலைக் கொண்ட ஊடுருவிகள் நகரங்களில் உள்ள அனைத்துக் கட்டடங்களிலும் விளக்குகளை அணைக்கலாம்.

மீன் தொட்டிகளில் உள்ள தொழில்நுட்பத்தையும் ஊடுருவலாம். மீன் தொட்டியில் தண்ணீர் வெப்பத்தையும் சுகாதாரத்தையும் கண்காணிக்கும் உணர்கருவிகளைக் கொண்டு தகவல்களை ஊடுருவ முடியும்.

5) சாலை விளக்குகள்

சாலை விளக்குகளை ஊடுருவுவதால் சாலை விபத்துகள் ஏற்படலாம். மொத்த போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு சாலை நெரிசல் ஏற்படலாம். கலிஃபோர்னியாவில் அண்மையில் சாலை விளக்குகள் ஊடுருவப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்