Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, மரணத்தைத் தள்ளிப்போடமுடியும்: ஆய்வு

வீட்டைச் சுத்தம் செய்பவர்கள் மரணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்: ஆய்வு

வாசிப்புநேரம் -

வாரத்தில் 5 நாட்கள், நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வீட்டைச் சுத்தம் செய்வது அல்லது வேலைக்கு நடந்து செல்வது. இதில் ஏதாவது ஒன்றை வழக்கமாகக் கொண்டவரா நீங்கள்?

மரணத்தை ஒத்தி வைக்கும் சாத்தியம் உங்களுக்கு அதிகம் என்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு.

லேன்செட் (Lancet) மருத்துவ சஞ்சிகை நடத்திய ஆய்வில் அந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

17 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 130,000 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். துடிப்பான உடல் இயக்கத்தைக் கொண்ட நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், மரணத்தை விளைவிக்கும் பிரச்சினைகள் வருவது மிகவும் குறைவு என்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எல்லா நாடுகளிலும் அதே போக்கு தென்பட்டதாய் ஆய்வாளர்கள் கூறினர்.

உலக சுகாதார நிறுவனம், வாரத்துக்கு, 150 நிமிட மிதமான உடல் இயக்க நடவடிக்கை, 75 நிமிட துடிப்பான நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கிறது.

ஆனால், உலக மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் அதைப் பின்பற்றுவதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்