Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதிய கைத்தொலைபேசி அறிமுகமானதும் உங்கள் கைபேசி மெதுவடைகிறதா?

பிரச்சினைக்குக் காரணம் என்ன? கைத்தொலைபேசி மெதுவடைந்தாலோ சேவைகள் தடைபட்டாலோ காரணம் என்ன என்பதைத் கண்டறியுங்கள்.

வாசிப்புநேரம் -

Apple நிறுவனம் எப்போதெல்லாம் புதிய கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்கிறதோ அப்போதெல்லாம், வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் தொலைபேசிகள் மெதுவாகச் செயல்படுவதாகக் குறைபட்டுக்கொள்வர்.

அண்மையில் iPhone X வெளியானது.

அப்போது கூகுளில் “iPhone slow”, அதாவது கைத்தொலைபேசி மெதுவடைந்தால் என்ன செய்யலாம் எனத் தேடியிருந்தோரின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடிக்கையாளர்கள் தங்களின் கைத்தொலைபேசிகளை மாற்றுவதற்காக நிறுவனங்கள் மேற்கொள்ளும் உத்தி அது எனப் பலர் எண்ணுவதுண்டு.

ஆனால் அது உண்மையல்ல என்கின்றனர் வல்லுநர்கள். 

மென்பொருள் மேம்பாடு அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மென்பொருளில் ஏற்படும் மாற்றங்களால் சிலவேளை எதிர்பாராதவை நேரலாம்.

கைத்தொலைபேசிகளின் மென்பொருளை மேம்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களால் சில நேரங்களில் பிரச்சினைகள் எழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

மெதுவடைந்து காணப்படும் தொழில்நுட்பக் கருவிகள் துரிதமாகச் செயல்பட சில வழிகள் உண்டு.

  • புதிதாகத் தொடங்குதல்

கைத்தொலைபேசியில் உள்ள "மேம்படுத்து" அம்சத்தைப் பயன்படுத்தலாம். கைத்தொலைபேசியில் உள்ள செயலிகளையும் தகவல்களையும் வேறு கருவிக்கு மாற்ற அது உதவும்.

  • தகவல்களைச் சேகரித்துச் சேமித்து வைத்துக்கொள்வதைப் பழக்கமாக்க வேண்டும்

புதிய மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்னர், கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களைக் கணினியில் சேகரித்துச் சேமித்து வைத்துக்கொள்வது அவசியம். புதிய மென்பொருளைப் பொருத்துவதையும் அந்த நடவடிக்கை சுலபமாக்கும்.

  • அவ்வப்போது தேவையில்லா செயலிகளை நீக்கவும்

அதிகமான செயலிகளைக் கைத்தொலைபேசியில் பதிவேற்றம் செய்வதால், அதன் செயல்பாடு மெதுவடையலாம். அதிகநாள் பயன்படுத்தப்படாத தேவையில்லா செயலிகளை அகற்றுவது நல்லது.

  • பிரச்சினைக்குக் காரணம் என்ன?

கைத்தொலைபேசி மெதுவடைந்தாலோ சேவைகள் தடைபட்டாலோ காரணம் என்ன என்பதைத் கண்டறியுங்கள். பிரச்சினை இணையக் கட்டமைப்பில் கூட இருக்கலாம். அதிகப் பணம் செலவழித்துக் கைதொலைபேசியை மாற்றுவதற்குப் பதில் சற்றுக் குறைவான விலையில் கட்டமைபில் கவனம் செலுத்தலாம். அது நீண்டகாலப் பயனும் அளிக்கும்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்