Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தூக்கமின்மைக்குப் புதுத் தீர்வு - செர்ரி (cherry) பழரசம்!

இரவில் தூங்க முடியாமல் அவதியுறுவோர் மெலட்டோனினை மாத்திரை வடிவில் உட்கொள்வதற்குப்  பதிலாக இனி செர்ரி (cherry) பழரசத்தை அருந்தலாம்.

வாசிப்புநேரம் -


மெலட்டோனின் (melatonin) என்னும் சுரப்பி (hormone) தூக்கத்தைச் சீர்செய்யும்.

இரவில் தூங்க முடியாமல் அவதியுறுவோர் மெலட்டோனினை மாத்திரை வடிவில் உட்கொள்வது வழக்கம்.

அதற்குப் பதிலாக இவர்கள் இனி செர்ரி (cherry) பழரசத்தை அருந்தலாம் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூங்குவதில் பிரச்சினையுள்ள 50 வயதிற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வு, செர்ரி பழரசத்தை அருந்துபவர்கள் சராசரியைவிட 84 நிமிடங்கள் கூடுதல் நேரம் தூங்கினார்கள் என்று கண்டறிந்தது. அவர்களது தூக்கம் இன்னும் சீராகவும் இருந்தது.

செர்ரி பழத்தில் மெலட்டோனின் அதிகம் இருப்பது அதற்குக் காரணம்.

தூக்கயின்மையாலோ அமைதியற்ற தூக்கத்தினாலோ பாதிக்கப்பட்டோர் இனி செர்ரி பழரசத்தைக் அருந்தலாம்!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்