Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வெண்டைக்காய் புளிக் குழம்பு

தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு வைப்பது எப்படி என்பதை இங்கு காட்டியுள்ளோம். இந்த குழம்பை சோறு அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

வாசிப்புநேரம் -


தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு வைப்பது எப்படி என்பதை இங்கு காட்டியுள்ளோம். இந்த குழம்பை சோறு அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது)

சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)

தக்காளி - 1 (நறுக்கியது)

பூண்டு - 6 பற்கள்

புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் (எலுமிச்சை அளவு புளியிலிருந்து) 

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - 1 டீஸ்பூன் 


தாளிப்பதற்கு... கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்


வறுத்து அரைப்பதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன்

மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - 6-10

துருவிய தேங்காய் - 1/2 கப்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸி அல்லது அம்மியில் வைத்து தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கான பொருட்களைச் சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் வெண்டைக்காயை சேர்த்து 7-10 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, அரைத்து வைத்துள்ள  விழுது சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்