Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

எடையை குறைக்க உதவும் பாரம்பரிய காலை உணவுகள்

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை உலகெங்கும் உள்ள பலர் சுவைத்து மகிழ்வர். நமது பாரம்பரிய உணவுகள் உடல் எடையை குறைக்கவும் உதவும் என்ற தகவல் பல பேருக்கு வியப்பு அளித்தாலும் உண்மை அதுவே. 

வாசிப்புநேரம் -
எடையை குறைக்க உதவும் பாரம்பரிய காலை உணவுகள்

வெண் பொங்கல்.

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை உலகெங்கும் உள்ள பலர் சுவைத்து மகிழ்வர். நமது பாரம்பரிய உணவுகள் உடல் எடையை குறைக்கவும் உதவும் என்ற தகவல் பல பேருக்கு வியப்பு அளித்தாலும் உண்மை அதுவே. 

இட்லி

இட்லி. 

உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் இட்லி, உலகளவில் மிகவும் சிறப்பான காலை உணவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இட்லியை காலையில் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும். 

தோசை

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்று தோசை. இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் இது எளிதில் செரிமானமாகக்கூடியது. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை உணவும் கூட.

வெண்பொங்கல்

இதில் கலோரிகள் அதிகமாகவும், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

பழைய சோறு

அக்காலத்தில் நம் முன்னோர்கள் பழைய சாதத்தை தான் பெரும்பாலும் காலை உணவாக எடுத்து வந்தார்கள். அதனால் தான் கடுமையாக உழைக்க தேவையான ஆற்றல் கிடைத்தது. மேலும் இன்றும் கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் காலை உணவாக பழைய சோறு தான் எடுத்து வருகிறார்கள். முக்கியமாக பழைய சோறு உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்கும்.

கூழ்

தானியங்களில் ஒன்றான கேழ்வரகு கொண்டு கூழ் செய்து காலை வேளையில் உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் தீரும். மேலும் ராகி கூழ் எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும். மேலும் உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறையும்.

இடியப்பம் 

இதனை உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாது, மேலும் விரைவில் பசி எடுக்க ஆரம்பிக்கும். 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்