Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பானி பூரி செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்: ரெடிமேட் மினி பூரி - தேவைக்கேற்ப‌

வாசிப்புநேரம் -
பானி பூரி செய்வது எப்படி?

பானி பூரி

தேவையான பொருள்கள்:

ரெடிமேட் மினி பூரி - தேவைக்கேற்ப‌

புதினா ‍- ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை ‍- ஒரு கைப்பிடி

கொத்தமல்லி ‍- ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் ‍- ஒன்று

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகு - 5

பூண்டு - ஒரு பல்

உருளை - 2

கொண்டைக்கடலை - சிறிது (தேவையெனில்)

வெங்காயம் - ஒன்று

மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப‌

செய்யும் முறை:

1.)     முதலில், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.)     அரைத்த விழுதுடன் தேவையான‌ தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

3.)      உருளைகிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மினி பூரிகளை எடுத்துக் கொள்ளவும்.

4.)     உருளை, கொண்டைக்கடலை மற்றும் பொடியாக‌ நறுக்கிய‌ வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக‌ சேர்த்து நன்கு பிசையவும். விரும்பினால் கொத்தமல்லியும் சேர்க்கலாம். அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

5.)     பூரிகளின் மேல் பகுதியில் சிறு ஓட்டை போட்டு அதனுள் சிறிது உருளை மசாலாவை வைக்கவும்.

6.)    சாப்பிடும் நேரத்தில் அதனுடன் அரைத்து வைத்துள்ள‌ புதினா சட்டினியை ஊற்றி கொடுக்கவும். சுவையான‌ பானி பூரி தயார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்