Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மருத்துவப் பயன்கள் நிறைந்த ரோஜா குல்கந்து

ரோஜா இதயத்திற்கு மிகவும் நல்லது. ரோஜா வைத்து செய்யப்படும் குல்கந்தும் இதய நோயாளிகளுக்கு நல்ல இதமான மருந்து. 

வாசிப்புநேரம் -
மருத்துவப் பயன்கள் நிறைந்த ரோஜா குல்கந்து

ரோஜா குல்கந்து

ரோஜா இதயத்திற்கு மிகவும் நல்லது. ரோஜா வைத்து செய்யப்படும் குல்கந்தும் இதய நோயாளிகளுக்கு நல்ல இதமான மருந்து. 

இதய நோயாளிகள் மட்டுமல்ல வயிறு கோளாறுகள் உள்ளவர்களும் குல்கந்தை சாப்பிடலாம்.

மேலும், குல்கந்து முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

‌பி‌த்த உட‌ம்பு உள்ளவர்களுக்கு பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து உதவுகிறது.

ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு சிறந்த மருந்து இந்த குல்கந்து.

தேவையான பொருள்கள்:

சிவப்பு ரோஜாக்கள்

கற்கண்டு

தேன்

எடைமானி

உரல்

பீங்கான் / கண்ணாடிச் சீசா

சீஸ் க்ளாத் / மஸ்லின்

கட்டுவதற்கு சணல் அல்லது ராஃபியா

 

செய்யும் முறை:

1) முதலில், தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

2.) பூச்சிகள் இல்லாத, கிருமிநாசினி தெளிக்காத செடிகளிலிருந்து புதிதாகப் பூத்த  ரோஜாக்களாகத் தெரிந்து பறித்துக் கொள்ளவும்.

3.) பூக்களைப் பறிக்கக் காலை வேளையே ஏற்றது. பூக்களின் இதழ்களைப் பிரித்து எடுக்கவும்.

4.) பின்னர், இதழ்களை ஓடும் நீரில் அலசிக் கொள்ளவும்.

5.) நீரை வடிய விட்டு எடுக்கவும். (சாலட் ஸ்பின்னரில் போட்டு சுற்றினால் விரைவாக வடிந்து விடும்.)

6.) நீர் வடிந்ததும் இதழ்களை நிறுத்துக் கொள்ளவும்.

7.) இதழ்களின் ஒன்றரை மடங்கு எடை கற்கண்டு நிறுத்து எடுத்துக் கொள்ளவும்.

8.) கற்கண்டை உரலில் போட்டுப் பொடிக்கவும். பிறகு, அதனோடு ரோஜா இதழ்களையும் சேர்த்து இடிக்கவும்.

9.) அனைத்தையும் சுத்தமான, உலர்ந்த சீசா ஒன்றில் போட்டு, வாயை துணியால் கட்டி இரண்டு நாட்கள் வெயிலில் வைக்கவும்.

10.) மூன்றாவது நாள் (அல்லது கலவை அதிகம் வறண்டு காணப்படும் சமயம்) மூன்று மேசைக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து மீண்டும் வெயிலில் வைக்கவும்.

11.) காலநிலையைப் பொறுத்து நான்கு அல்லது ஐந்து நாட்களில் ரோஜா இதழ்கள் பதமாகி இருக்கும். அதன் பின்னர், சீசாவை இறுக்கமாக மூடி வைத்து தேவையான போது பயன்படுத்தலாம். எடுப்பதற்கு எப்பொழுதும் சுத்தமான உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்தவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்