Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சொகுசுக் கப்பலில் வசிக்கும் செல்வந்தர்கள்

சகல வசதிகளும் கொண்ட மாளிகையில் வாழ ஆசையா? கடலில் மிதந்து கொண்டே உலகைச் சுற்றி வர ஆசையா? இப்போது இரண்டுமே ஒரே இடத்தில் சாத்தியம்.

வாசிப்புநேரம் -
சொகுசுக் கப்பலில் வசிக்கும் செல்வந்தர்கள்

(படம்: aboardtheworld.com)

சகல வசதிகளும் கொண்ட மாளிகையில் வாழ ஆசையா?
கடலில் மிதந்து கொண்டே உலகைச் சுற்றி வர ஆசையா? இப்போது இரண்டுமே ஒரே இடத்தில் சாத்தியம்.

உலகின் மிதக்கும் இல்லங்களைக் கொண்ட முதல் சொகுசுக் கப்பல் தி வேர்ல்ட் (The World).

ஹாங்காங்கின் விக்டோரியா துறைமுகத்தில் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ளது அந்தக் கப்பல்.

அதில், உலகின் முதல் மிதக்கும் டென்னில் திடல் உண்டு.

உடற்பிடிப்பு நிலையம், உடற்பயிற்சி நிலையம் என்பன போன்ற பல வசதிகளுக்காக 650 சதுர அடி பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 640,000 கடல் மைல் தூரம் பயணம் செய்து 1,200 க்கும் அதிகமான துறைமுகங்களுக்குச் சென்றுள்ளது.

அண்டார்டிக்கா, மெலனீசியா என பல கண்காணா இடங்களைச் சென்றடைந்துள்ளது கப்பல்.

12 மாடிக் கப்பலில் 165 சொகுசு இல்லங்கள் உண்டு.

வீட்டின் விலை அதன் அளவைப் பொறுத்து மூன்றிலிருந்து 15 மில்லியன் டாலர்.

கை நிறையப் பணம் இருந்தாலும் வீட்டை எளிதில் வாங்க முடியாது.

குறைந்தது பத்து மில்லியன் டாலர் கையிருப்பு இருந்தால் வீடு வாங்கத் தகுதி பெறலாம்.

என்றாலும் போதிய தொகை கைவசம் இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே கப்பலில் வீடு வாங்க முடியும்.

தற்போது சொகுசுக் கப்பலில் சுமார் 140 குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்